வ.எ. பெயர் ஆசிரியர் வகை இதழ்,நூல்
வெளியிடு/
இணைய
வெளியிடு
நூல்/ இதழ் பற்றிய சிறு குறிப்பு

100. சூரிய நாராணயண சாஸ்திரியார் - ஜி.யூ.போப் அரிய நூல் 1901
(27-11-08)

தனிப்பாசுரத் தொகை நூல் - 41 தலைப்புகளில் சூரிய நாராயண சாஸ்திரியார் பாடிய மரபுத் தனிப் பாடல்களை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் அவர்கள் மொழி பெயர்த்து எழுதியுள்ள நூலிது. (2.14 MB)


99. பத்திராதிபர் மாத இதழ் சனவரி 1905
(27-11-08)

விவேக சிந்தாமணி இதழ் - அறிவை பரவச் செய்வதற்கான மாதாந்திர தமிழ் பத்திரிகை என அறிவித்துள்ளது. தலைப்பில் குறளை வெளியிட்டு, இதழில் கருத்துமிகு கட்டுரைகளை எழுதியுள்ளது (2.86 MB)


98. திருலோக சீத்தாராம் மாதம் இருமுறை ஆகஸ்ட் 1944
(27-11-08)

கிராம ஊழியன் இதழ் - தரமான இலக்கிய இதழ். கவிதை, ந.பிச்சமூர்த்தி, அ.வெ.ர, தி.ஜ.ர, வ.க, எனத் தமிழகத்தின் இலக்கியவாதிகள் சிறப்பாகப் பங்களிப்புச் செய்துள்ள இதழ். (3.59 MB)


97. ஆசிரியர் திங்களிதழ் மார்ச் 1917
(26-11-08)

ஆனந்த போதினி இதழ் - சிறப்பான கட்டுரைகளையும், பயனாகுகிற குறிப்புகளையும் தொடர் நாவலையும், கதைகளையும் வெளியிட்டுள்ளது. (2.29 MB)


96. வை. கோவிந்தன் திங்களிதழ் மே 1949
(26-11-08)

சக்தி இதழ் - அழகிய விளம்பரங்களையும், சுவையான கட்டுரைகளையும், அரிய புகைப்படங்களையும், கதை, கவிதை, துணுக்கு எனவும் அதிக பக்கங்களில் சக்தி காரியாலயம் வெளியிட்ட இதழ். (5.07 MB)


95. சபா. சிவப்பிரகாசம் பி்ள்ளை (உரை) நூல் நவம் 1950
(26-11-08)

சிவஞானபோதச் சூத்திரங்கள் நூல் - பின்னலூர் இராம. கணபதிப் பி்ள்ளையின் நினைவு மலராக, தில்லைத் திருமுறைக் கழகம் வெளியிட்ட நூல். (0.77 MB)


94. கோவை மகேசன் சிற்றிதழ் மார்கழி 1976
(25-11-08)

சுடர் 08 இதழ் - கலை இலக்கியத் திங்களிதழ். புதிய சமுதாயச் சிந்தனைகளோடு ஈர்ப்புடைய படைப்புகளையும் வெளியிட்டுள்ளது. தாமரைத் தீவான் செவ்வி உள்ளது. (3.32 MB)


93. நிந்ததாசன் சிற்றிதழ் மார்ச் 1994
(25-11-08)

தோழன் 08 இதழ் - கலை இலக்கிய இதழ். மின்மினிகள் எனத் துணுக்குகள், கவிதை, கதை இதழிலுள்ளன. இந்த இதழில் அப்துல் அமீது அவர்களை நேர்காணல் செய்துள்ளது (1.39 MB)


92. நிந்ததாசன் சிற்றிதழ் மார்ச் 1993
(25-11-08)

தோழன் 04 இதழ் - கலை இலக்கிய இதழாகக் கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பாக்கங்களை வெளியிட்டுள்ளது. (1.13 MB)


91. சாருமதி
வாசுதேவன்
காலாண்டிதழ் சூன் 1996
(25-11-08)

பூவரசு 02 இதழ் - கலை இலக்கிய விமர்சனப் படைப்பாக்க இதழ். கருத்தரங்குகளை நடத்தியுள்ளது (1.90 MB)


90. சாருமதி
வாசுதேவன்
காலாண்டிதழ் மார்ச் 1996
(25-11-08)

பூவரசு 01 இதழ் - கலை இலக்கிய விமர்சனப் படைப்பாக்க இதழ். கருத்தரங்குகளை நடத்தியுள்ளது (1.91 MB)


89. அரிமா வளவன் வரலாற்று நூல் நவம்பர் 2008
(24-11-08)

யாருக்கு இந்த ஆயுதம் நூல். வேர்கள் இதழாளர் எழுதிய அருமையான நூல். தமிழீழ மண்ணின் வரலாற்றுப் பதிவினை சரியாக வெளிப்படுத்தி, பிரச்சனைக்கான காரணங்களை வரிசைப் படுத்துவதோடு தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற தீர்வையும் முன்வைக்கிறது. (1.56 MB)


88. க.சி.குலரத்தினம் சிற்றிதழ் ஐப்பசி 1983
(24-11-08)

மில்க் வைற் செய்தி 94 இதழ் - துணுக்குச் செய்திகள் நிறைய உள்ளன. இந்த இதழில் ஈழத்தின் குருகுலக் கல்வி பற்றியும், நூலகம் பற்றியும் காணப்படுகிறது. (1.56 MB)


87. க.சி.குலரத்தினம் சிற்றிதழ் ஆனி 1990
(24-11-08)

மில்க் வைற் செய்தி 174 - துணுக்குச் செய்திகள் நிறைய உள்ளன. இந்த இதழில் மரம் கொடுத்து ஊக்குவித்த மண் தினம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. (1.00 MB)


86. க.சி.குலரத்தினம் சிற்றிதழ் ஆடி 1990
(24-11-08)

மில்க் வைற் செய்தி 175 இதழ் - இராமநாதன், மாதகல் ஏரம்பு ஐயர் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு துணுக்குக் கருத்துகளை இணைத்துள்ளது. (0.97 MB)


85. க.சி.குலரத்தினம் சிற்றிதழ் ஆவணி 1990
(24-11-08)

மில்க் வைற் செய்தி 176 இதழ் - முயற்சி திருவினையாக்கும் தலைப்புக் கட்டுரையும், நாம் வாழுகிற பூமி பற்றிய குறிப்பும் உள்ளன. (0.93 MB)


84. க.சி.குலரத்தினம் சிற்றிதழ் புரட்டாதி 1990
(24-11-08)

மில்க் வைற் செய்தி 177 இதழ் - நிலம் சுரக்கும் நிதியம், எலுமிச்சம்பழம், தென்னை, பனை, இலுப்பை என மண் வளம் பெருக்க இந்த இதழ் எடுத்த செயற்பாடுகள் கணக்கிலடங்கா. (1.01 MB)


83. க.சி.குலரத்தினம் சிற்றிதழ் ஐப்பசி 1990
(24-11-08)

மில்க் வைற் செய்தி 178 இதழ் - காந்தி நினைவு நாளை எழுதியுள்ளது. பல்வேறு துணுக்குச் செய்திகளையும் இணைத்துள்ளது. (0.94 MB)


82. செம்பியன் செல்வன் சதுர்மதி ஏடு நவம்பர் 1970
(23-11-08)

விவேகி இதழ் - குறுநாவல், குட்டிக் கதை, கட்டுரை, உருவகக் கதை, மொழி பெயர்ப்பு, மரபுப் பாக்கள் எனத் தரமாக வெளிவந்த இதழ். இந்த இதழில் தாளையடி சபாரத்தினம் பற்றி எழுதி, படைப்பும் வெளியிட்டுள்ளது. (4.21 MB)

81. ஆசிரியர் குழு திங்களிதழ் ஐப்பசி 1985
(23-11-08)

அலை 26 இதழ் - மார்க்சியக் கருத்துகளை உள்வாங்கிய படைப்பாளிகளின் கலை இலக்கிய இதழ். படைப்பு, விமர்சனம் என ஆழமாக இயங்கியுள்ளது. மூவர் பார்வைகள் என்ற கட்டுரை தரமானதே. (3.68 MB)

80. ஆசிரியர் குழு சிற்றிதழ் சூலை 1984
(23-11-08)

களம் 01 இதழ் - கலை இலக்கிய வட்டத்தை உருவாக்கி, படைப்பாளிகளை ஊக்குவித்துத் தரமான படைப்புகளை வெளியிடத் திட்டமிட்டு இயங்கிய இதழ். (2.46 MB)

79. இரா.நாகலிங்கம் சிற்றிதழ் சூலை 1970
(23-11-08)

மலர் 05 இதழ் - மக்களை ஈர்க்கிற படைப்பாக்கங்களை வெளியிட்டுள்ளது. கதை, கட்டுரை, கவிதை, நூல் விமர்சனம் எனச் சுவையாகத் தொடர்ந்துள்ளது. (3.83 MB)

78. வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் நூல் 1901
(22-11-08)

பாவலர் விருந்து நூல் - ஞானபோதினி சிற்றிதழில் வெளிவந்த 3 படைப்புகளும், வெளியிடப்படாத பட்டினக்காட்சி மதுரைமாநகர் போலியாராய்சியன் ஓர் அய்யப்பாடு என்கிற நான்கும் இந்நூலில் உள்ளன. (2.19 MB)

77. அ. சிவகுருநாதன் நூல் சனவரி 1955
(22-11-08)

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம் நூல் - சபாபதி நாவலரவர்களின் சரித்திரச் சுருக்கமும், திராவிடப் பிராகாசிகை இதழுக்கு நாவலர் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையும் இந்நூலில் உள்ளன. (2.04 MB)

76. மோசூர் வேங்கடசாமி நூல் மே 1908
(21-11-08)

உத்தம நீதி நூல் - 100 பாக்களில் 100 நீதிக் கருத்துகளடங்கிய முதற்சதகம். திருக்குறள் நாலடியார் போன்று உயர் கருத்துகளமைந்த எளிமையான பாடல்கள் உள்ளன. (0.98 MB)

75. க.சி.குலரத்தினம் சிற்றிதழ் கார்த்திகை 1990
(20-11-08)

மில்க் வைற் செய்தி 179 இதழ் - கலாநிதி கந்தையா கனகராசா அவர்களது பன்முக ஆற்றலைக் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு துணுக்குச் செய்திகளையும் இணைத்துள்ளது. (1.20 MB)


74. க.சி.குலரத்தினம் சிற்றிதழ் சித்திரை 1990
(20-11-08)

மில்க் வைற் செய்தி 172 இதழ் - கவியோகி சுத்தானந்த பாரதியார் நினைவுச் சிறப்பிதழ். இவர் பற்றிய செய்திகளை இதழில் இணைத்துள்ளது. (1.54 MB)


73. முனைவர் இரா.திருமுருகன் நூல் மார்ச் 2005
(19-11-08)

இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள் நூல் - இலக்கணத்தை எளிமையாக்கி, தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான அடிப்படையை விளக்குகிற நூல். மாணவர் /ஆசிரியருக்கு உதவுவது. இந்நூலில் மழலையர்களுக்கான தமிழ்ப் பெயர்களும் உள்ளன. (1.21 MB)


72. சிவப்பிரகாச
சுவாமிகள்
உரை நூல் (ஸ்ரீஆறுமுக நாவலர்) ருத்ரோகாரி
(18-11-08)

நன்னெறி நூல் - மக்கள் வழி நடப்பதற்கு ஏற்ற, கருத்துகளை வரிசைப் படுத்தியுள்ள நூல். ஸ்ரீ ஆறுமுக நாவலரின் உரையுடன். (0.80 MB)


71. N.லோகேந்திரலிங்கம் சிற்றிதழ் செப் 1975
(18-11-08)

அக்னி 03 இதழ் - மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக் களமான இதழ். உரைவீச்சுகள் உள்ளன. வெளிவந்த பிற இதழ்களை அறிமுகம் செய்துள்ளது. (2.40 MB)


70. N.லோகேந்திரலிங்கம் சிற்றிதழ் சூலை 1975
(17-11-08)

அக்னி 01 இதழ் - மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக் களமான இதழ். உரைவீச்சுகள் உள்ளன. வெளிவந்த பிற இதழ்களை அறிமுகம் செய்துள்ளது. (1.42 MB)


69. க. பெரியசாமி நூல் 1958
(17-11-08)

செயலிசை இன்பம் நூல் - காந்தியடிகளின் ஆதாரக் கல்வி பற்றிய கருத்துகளை பழைய திரைப் பாடல்களின் இசை வடிவில் உருவாக்கிய இசைப்பாடல்களின் தொகுப்பு. (1.08 MB)


68. வரதர் சிற்றிதழ் மே 1995
(16-11-08)

அறிவுக் களஞ்சியம் 31 இதழ் - தலைப்பில் திருக்குறளை வெளியிட்டு, அறிவியல் கருத்துகளையும், ஆக்க பூர்வமான பல்வேறு குறிப்புகளையும் உள்ளடக்கித் தரமாக வெளிவந்த இதழ். (1.66 MB)


67. வரதர் சிற்றிதழ் செப் 1994
(16-11-08)

அறிவுக் களஞ்சியம் 25 இதழ் - தலைப்பில் திருக்குறளை வெளியிட்டு, அறிவியல் கருத்துகளையும், ஆக்க பூர்வமான பல்வேறு குறிப்புகளையும் உள்ளடக்கித் தரமாக வெளிவந்த இதழ். (1.80 MB)


66. வரதர் சிற்றிதழ் சூன் 1994
(16-11-08)

அறிவுக் களஞ்சியம் 23 இதழ் - தலைப்பில் திருக்குறளை வெளியிட்டு, அறிவியல் கருத்துகளையும், ஆக்க பூர்வமான பல்வேறு குறிப்புகளையும் உள்ளடக்கித் தரமாக வெளிவந்த இதழ். (1.88 MB)


65. வரதர் சிற்றிதழ் ஏப் 1994
(16-11-08)

அறிவுக் களஞ்சியம் 22 இதழ் - தலைப்பில் திருக்குறளை வெளியிட்டு, அறிவியல் கருத்துகளையும், ஆக்க பூர்வமான பல்வேறு குறிப்புகளையும் உள்ளடக்கித் தரமாக வெளிவந்த இதழ். (1.96 MB)


64. ஜெ.ஜெயமயூரகன் சிற்றிதழ் வைகாசி 1988
(15-11-08)

அறிவு 02 இதழ் - மாத இதழாக மாணவர்களுக்கான இலக்கியம், பொது அறிவு, பாடநூல் எனப் பல்வேறு அறிவுச் செய்திகளை திருகோணமலையிலிருந்து வெளியிட்ட இதழ். வாசகர் வட்டம் அமைத்திருந்தது. (1.54 MB)


63. ஏ.கே.செட்டியார் சிற்றிதழ் டிச 1972
(15-11-08)

குமரி மலர் இதழ் - 29 ஆவது ஆண்டின் 9 ஆவது இதழ். பல்வேறு துணுக்குச் செய்திகளைத் தொகுத்த திரட்டிதழ். சென்னை. புதிய படைப்பாக்கங்களையும் வெளியிட்டுள்ளது. (3.05 MB)


62. எம்.சி.கண்ணபிரானார் சிற்றிதழ் ஆக 1967
(15-11-08)

தமிழ்த்தேன் 10 இதழ் - கா.வேழவேந்தன் பொறுப்பாசிரியராக இருந்து வெளியிட்ட புதிய படைப்பாக்கங்களை உடைய இதழ். கதை, கவிதை, துணுக்குகளை முதன்மைப் படுத்தியுள்ளது. (2.28 MB)


61. கே.பி.சாரதி சிற்றிதழ் மார்ச் 1948
(14-11-08)

அருணோதயம் 05 இதழ் - கோவையிலிருந்து மக்களை ஈர்க்கிற படைப்புகளமைந்த பல்சுவை திங்களிதழாக வெளிவந்துள்ளது. (2.23 MB)


60. ஆசிரியர் குழு சிற்றிதழ் சூலை ஆக
1992
(14-11-08)

சாளரம் 12 இதழ் - இளையோர் திங்களிதழ் என இலக்கியத் தரமாக வெளிவந்துள்ளது. துணுக்குச் செய்திகள், புதுக்கவிதை, கட்டுரை, அறிவியல், அரசியல், மருத்துவம், இலக்கியம் எனப் பன்முக ஆற்றலோடு இதழ் தொடர்ந்துள்ளது. சிறுகதைப் போட்டிகள் வைத்துள்ளது. (2.45 MB)


59. சி. மகேஸ்வரன் சிற்றிதழ் அக் 1971
(13-11-08)

இதயம் 06 இதழ் - கலை இலக்கியத் திங்களிதழ் என அறிவித்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இதழ். சிறுகதை, புதுக்கவிதை என மக்களை ஈர்க்கிற படைப்பாக்கங்களை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் ஓவியர் மணியம் நேர்காணல் உள்ளது. (2.61 MB)


58. எம். பௌஸர் சிற்றிதழ் பிப் 1993
(13-11-08)

தடம் 03 இதழ் - மொழி பெயர்ப்பு, படைப்பாக்கம், உரைவீச்சுகள், குறிப்புகள், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுடன் அக்கறைப்பற்றிலிருந்து வெளிவந்த இதழ். (1.05 MB)


57. ஆசிரியர் குழு சிற்றிதழ் 1974
(13-11-08)

ஏன் 04 இதழ் - புதுவையிலிருந்து வெளிவந்த இலவச இதழ். ஒவ்வொரு இதழையும் ஒரு இலக்கியவாதி உருவாக்கியுள்ளார். இந்த இதழ் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான படைப்பிலக்கிய இதழ். 6 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் தயாரிப்பு ராஜரிஷி. (723 KB)


56. KS.பரிபூரணாநந்தர் வைத்திய இதழ் விகிர்தி ஆடி
(12-11-08)

வைத்தியன் 10 இதழ் - 1949 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சித்த ஆயுள்வேத வைத்திய சங்கத்தின் சார்பில் தொடர்பு இதழாகத் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் 20 ஆம் வருடாந்திர அறிக்கை இந்த இதழில் உள்ளது. மருத்துவக் குறிப்புகள், செய்திகள் உள்ளன. இலவச மருத்துவ சாலை பற்றிய குறிப்பும் உள்ளது. (2.38 MB)


55. NK.மகாலிங்கம் சிற்றிதழ் தை பங்குனி1974
(12-11-08)

பூரணி 07 இதழ் - புதிய படைப்பாக்கங்களையும், படைப்பிலக்கிய விமர்சனங்களை உள்ளடக்கியதாக வெளிவந்த தரமான இதழ். கலை மக்களுக்காகவே என்கிற அடித்தளத்தை உடையது. படைப்புகள் பற்றிய கூர்மையான விமர்சனங்களை இது பதிவு செய்துள்ளது. (3.11 MB)


54. ஆசிரியர் குழு சிற்றிதழ் 1974
(11-11-08)

ஏன் 03 இதழ் - புதுவையிலிருந்து வெளிவந்த இலவச இதழ். ஒவ்வொரு இதழையும் ஒரு இலக்கியவாதி உருவாக்கியுள்ளார். இந்த இதழ் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான படைப்பிலக்கிய இதழ். 6 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் தயாரிப்பு சாகித்யன். (816 KB)


53. ஆசிரியர் குழு சிற்றிதழ் 1974
(11-11-08)

ஏன் இதழ் எண் 06 - புதுவையிலிருந்து வெளிவந்த இலவச இதழ். ஒவ்வொரு இதழையும் ஒரு இலக்கியவாதி உருவாக்கியுள்ளார். இந்த இதழ் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான படைப்பிலக்கிய இதழ். 6 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் தயாரிப்பு சாகித்யன். (861 KB)


52. ஆசிரியர் குழு சிற்றிதழ் 1974
(10-11-08)

ஏன் இதழ் 5 - புதுவையிலிருந்து வெளிவந்த இலவச இதழ். ஒவ்வொரு இதழையும் ஒரு இலக்கியவாதி உருவாக்கியுள்ளார். இந்த இதழ் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான படைப்பிலக்கிய இதழ். 6 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் தயாரிப்பு மஹாபிரபு. (0.98 MB)


51. ஆசிரியர் குழு சிற்றிதழ் செப்-டிச 1986
(10-11-08)

வயல் இதழ் - கலை இலக்கிய சமூக அறிவியல் காலாண்டிதழ் என அறிவித்து மட்டக்கிளப்பிலிருந்து தொடங்கிய இதழ். இலக்கியம் இல்லாச் சமூகம் இயக்கம் இல்லாச் சமூகம் என முதல் இதழின் தலைப்பில் அறிவித்துள்ளது. (1.71 MB)